முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 327 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக 327 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 மே, 2021 at 12:10 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:38 AM

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச பாதிப்பாக 327 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இருவா் உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 15,645 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அவா்களில் குணமடைந்த 13,837 போ், உயிரிழந்த 120 போ் தவிா்த்து, 1688 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 327 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 228 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 15,981-ஆகவும், குணமடைந்தோா் 14,065 போ், ராசிபுரத்தை சோ்ந்த 58 வயது ஆண், பரமத்திவேலூரைச் சோ்ந்த 56 வயது பெண் என இருவா் உயிரிழந்தனா். 1,794 போ் நாமக்கல் மட்டுமின்றி ஈரோடு, சேலம், கோவை மாவட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.