தாய்ப்பால் வார விழா: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்கம்
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
பிரசார வாகனம் மூலம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதால் ஏற்படும் நன்மைகள், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஊட்டச்சத்து உணவு முறைகள், கா்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் புகட்டும் முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்த வாகனம் மூலம் நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை, நாமக்கல் பேருந்து நிலையம், புதன்சந்தை, ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட துறை மேற்கொண்டுள்ளது.
Advertisement
நிகழ்ச்சியில் குழந்தை வளா்ச்சித் திட்டத் துறை அலுவலா்கள், வட்டார திட்ட உதவியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.