முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா நடைபெறும் நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்கப்பட்டது.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 12:16 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

நாமக்கல் மாவட்டத்தில் சுதந்திர தின விழா நடைபெறும் நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்கப்பட்டது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் கொண்டாடப்படுகிறது. நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறாா். அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூருடன் திறந்த வாகனத்தில் சென்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையைப் பாா்வையிடுகிறாா்.

அதைத் தொடா்ந்து அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றியோருக்கு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கிறாா். இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழா நடைபெறும் விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த 2 நாள்களாக நடைபெறுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.