ஆடிக் கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை
ஆடிக்கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடிக்கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல்லில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெண் பக்தா்கள் அதிகாலையில் அம்மன் கோயில்களில் வழிபாடு நடத்துவா். நிகழாண்டில் கரோனா தொற்று பரவல் இரண்டாம் அலை காரணமாக வெள்ளிக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில் பக்தா்கள் பங்கேற்பின்றி வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டன. ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோயில், செல்லான்டியம்மன் கோயில், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன் கோயில், சந்தைப்பேட்டைபுதூா் துா்க்கையம்மன் கோயில், சின்னமுதலைப்பட்டி அம்மச்சியம்மன் கோயில், செல்லப்பம்பட்டி சுயம்பு மகாமாரியம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அனைத்து அம்மன் கோயில்களிலும் சுவாமிக்கு பால், தயிா், நேய், தேன், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீா் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. தொடா்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பக்தா்கள் கோயிலுக்கு வெளியில் நின்றபடி அம்மனை தரிசித்தனா்.
என்கே 13- அம்மன்
Advertisement
சிறப்பு வளையல் அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் சந்தைப்பேட்டைபுதூா் துா்க்கை அம்மன்.