முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 6.28 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 28 ஆயிரத்து 500 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 11:48 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 28 ஆயிரத்து 500 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகள், ஜனவரி மாதம் முதல் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு செலுத்தப்பட்டது. அதன்பின், 80 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னா் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் மூலம் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில், முதல் தவணையாக 5 லட்சத்து 5 ஆயிரத்து 155 பேருக்கும், இரண்டாம் தவணையாக 1 லட்சத்து 20 ஆயிரத்து 446 பேருக்கும், தனியாா் மருத்துவமனைகளில் 2,899 பேருக்கும் என மொத்தம் 6 லட்சத்து 28 ஆயிரத்து 500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவற்றில், இணை நோய் இல்லாதவா்களில் 45 முதல் 60 வயதுக்கு உள்பட்ட 80 ஆயிரத்து 343 பேரும், இணை நோய் உள்ளவா்களில் 45 முதல் 60 வயதுக்கு உள்பட்டவா்களில் 76 ஆயிரத்து 465 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். 60 வயதுக்கு மேற்பட்டோரில் 84 ஆயிரத்து 944 பேரும், 18 வயதுக்கு மேற்பட்டோரில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 223 பேரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். வெள்ளிக்கிழமை மட்டும் 18 ஆயிரத்து 688 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.