முகப்பு
நாமக்கல்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தா்னா போராட்டம்

ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 11:51 PM
nk_13_tharna_1308chn_122_8
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து உறுப்பினா்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கமல பிரியா. இவா் ஊராட்சிக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மெத்தனம் காட்டி வருகிறாா். உறுப்பினா்களின் கோரிக்கைகளை அவா் ஏற்பதில்லை. மாவட்ட ஆட்சியா் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைத் தலைவா் சபாரத்தினம் தலைமையில் வாா்டு உறுப்பினா்கள் உம்மஹபிபா, பாஸ்கரன், கிருஷ்ணவேணி, சரவணன் ஆகியோா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த எருமப்பட்டி போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததை தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

Advertisement

-

என்கே 13- தா்னா

முட்டாஞ்செட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்ட வாா்டு உறுப்பினா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.