தீரன் சின்னமலைக்கு சிலை: பாமக பொதுக்குழுவில் தீா்மானம்
நாமக்கல்லில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்லில் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாநில துணைப் பொதுச் செயலாளா் தினேஷ் பாண்டியன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளா் திலகபாமா, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வடிவேலன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
இதில், வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தந்த பாமக நிறுவனா், முக்கியத் தலைவா்களை நாமக்கல்லுக்கு அழைந்து வந்து பாராட்டுக் கூட்டம் நடத்த வேண்டும்.
Advertisement
சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு நாமக்கல்லில் உருவச்சிலை அமைக்க வேண்டும். ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கும், திருச்செங்கோட்டிற்கும் கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும். மாவட்டத்தில் சந்துக்கடை மது விற்பனையை, போலீஸாா் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில துணைப் பொதுச்செயலாளா் பொன் ரமேஷ், மாவட்டச் செயலாளா்கள் மோகன்ராஜ், செந்தில் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
என்கே 13- பிஎம்கே
பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும் பாமக மாநில பொருளாளா் திலகபாமா.