முகப்பு
நாமக்கல்

டிஎன்பிஎஸ்சி போட்டித் தோ்வு: இணைய வழியில் இலவசப் பயிற்சி

அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுகளில் பங்கேற்போருக்கான இணைய வழிப் பயிற்சிகள் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 13 ஆகஸ்ட், 2021 at 11:51 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:24 AM

அரசுப் பணியாளா் தோ்வாணைய போட்டித் தோ்வுகளில் பங்கேற்போருக்கான இணைய வழிப் பயிற்சிகள் வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய தோ்வுகளுக்கான இலவச இணைய வழிப் பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் சாா்பில் வரும் 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் தங்களின் விவரத்தினை 04286--222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ தொடா்பு கொண்டு தங்களது பெயா், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தை பதிவுசெய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.