வெள்ளைக் கழிச்சல் நோயால் கோழிகள் உயிரிழப்பு:வானிலை ஆய்வு மையம் தகவல்
முட்டை அயற்சி, வெள்ளைக் கழிச்சல் நோயால் கோழிகள் உயிரிழப்பு ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முட்டை அயற்சி, வெள்ளைக் கழிச்சல் நோயால் கோழிகள் உயிரிழப்பு ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வானிலையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும், மாவட்டத்தின் பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 8 கி.மீ. என்ற அளவில் வீசும்.
Advertisement
சிறப்பு ஆலோசனை: பண்ணை கோழிகளை கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் இறந்த கோழிகள் பெரும்பாலும் முட்டை அயற்சி, வெள்ளை கழிச்சல் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் வெள்ளை கழிச்சல் நோய்க்கான உமிழ்நீா் பரிசோதனை செய்து தகுந்த தடுப்பூசி போடுமாறும், ஈகோலை கிருமியின் தாக்கத்தை கட்டுப்படுத்த குடிநீரில் தகுந்த கிருமிநாசினி உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.