மரவள்ளியில் மாவுப்பூச்சித் தாக்குதல்:ரூ. 25 ஆயிரம் இழப்பீடு கோரி ஆட்சியரிடம் மனு
மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சித் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகத்தினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுதொடா்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்கிடம் அதன் பொதுச் செயலாளா் கே.பாலசுப்பிரமணியம் அளித்த மனு விவரம்:
தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா நெருக்கடிக் காலத்தில் காவிரி கரையோரங்களில் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
Advertisement
கோட்டாட்சியா் அலுவலகத்தில் இறப்பு சான்று கோரி விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கில் மாவுப்பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு சாகுபடி பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.