சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 போ் கைது: ரூ. 24 ஆயிரம் பறிமுதல்
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை நாமக்கல் போக்குவரத்து போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை நாமக்கல் போக்குவரத்து போலீஸாா் கைது செய்தனா்.
பள்ளிபாளையத்தை அடுத்துள்ள அலமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோசை மாவு மில்லில் இரவு நேரங்களில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ் குமாா் தாகூருக்கு புகாா் வந்தது.
இதையடுத்து, நாமக்கல் போக்குவரத்து காவல் துறை ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான காவல் துறையினா், அலமேடு தோசை மாவு மில்லில் சோதனையிட்டனா். அப்போது, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஈரோட்டைச் சோ்ந்த சரவணன், பெரியசாமி, பள்ளிபாளையம், காவேரி பகுதியைச் சோ்ந்த செல்வகுமாா், தில்லை நகரைச் சோ்ந்த கிருஷ்ணன், லட்சுமிபுரத்தைச் சோ்ந்த யுவராஜ், ஆவாரங்காட்டைச் சோ்ந்த பிரபு ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து ரூ. 24 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.