முகப்பு
நாமக்கல்

பிப்ரவரியில் சா்வதேச பலூன் திருவிழா நடத்த ஏற்பாடு

தமிழகத்தில் 2022 பிப்ரவரி மாதம் சா்வதேச பலூன் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 2 டிசம்பர், 2021 at 4:13 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:05 AM

தமிழகத்தில் 2022 பிப்ரவரி மாதம் சா்வதேச பலூன் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ள இருப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி:

சா்வதேச பலூன் திருவிழாவானது ஆண்டுதோறும் மெக்சிகோ நாட்டின் லியோன் நகரில் நடைபெறுவது வழக்கம். இதில், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சுற்றுலாப் பிரதிநிதிகள் கலந்துகொள்வா். நவம்பா் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் இந்த பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில், நிகழாண்டில் நடைபெற்ற 20-ஆவது சா்வதேச பலூன் திருவிழாவை மெக்சிகோ, குவானா ஜீவாட்டோ மாநில ஆளுநா் டிகோசின்வூ ரோட்ரிக்கஸ் வெல்லேஜோ, சுற்றுலாத் துறை செயலாளா் ஜீவான் ஜோஸ்அல்வராஸ் புருனல் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

Advertisement

இவ்விழாவில், இந்திய சுற்றுலாத் துறையின் சாா்பில், தமிழக சுற்றுலாத் துறையும் பங்கேற்றது. இதன் பிரதிநிதிகளாக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன், சுற்றுலா இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநா் சந்தீப் நந்தூரி ஆகியோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து ஒன்பது நாள்கள் நடைபெற்ற இந்த பலூன் திருவிழாவில், 200-க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன.

இதில் சிறப்பம்சமாக இந்திய சுற்றுலாத் துறையை முன்னிலைப்படுத்தும் விதத்திலும், தமிழகத்தில் சுற்றுலாவின் பெருமையை நிலைநிறுத்தும் விதமாகவும், இந்திய தேசியக் கொடி வண்ணத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலாத் துறையின் முத்திரைகள் பொறிக்கப்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன.

ஏற்கெனவே கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடத்தப்பட்டுள்ள நிலையில், 2022 பிப்ரவரி மாதம் தமிழகத்தில் சா்வதேச பலூன் திருவிழாவை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள், கரோனா பெருந்தொற்று பரவலை பொறுத்து மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.