பால் தரம் கண்டறியும் கருவி பயன்பாடு தொடக்கி வைப்பு
நாமக்கல் அருகே கீழ்சாத்தம்பூா் ஊராட்சி, பெருமாம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம், கொழுப்பு,
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:06 AM
நாமக்கல் அருகே கீழ்சாத்தம்பூா் ஊராட்சி, பெருமாம்பாளையம் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம், கொழுப்பு, இதர சத்துகளை கண்டறியும் நவீன கருவி வியாழக்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. இதனை நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் தொடங்கி வைத்தாா்.
இந்தக் கருவி மூலம் பால் விநியோகிக்கும் உற்பத்தியாளா்களுக்கு உரிய விலை கிடைக்கும். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளரும் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தலைவருமான ஏ.தமிழரசு, ஒன்றியச் செயலாளா் பழனிவேல், கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.