முகப்பு
நாமக்கல்

விபின் ராவத் மறைவு: மலரஞ்சலி

குன்னூரில் புதன்கிழமை ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில், நாட்டின் முப்படைத் தளபதியான விபின் ராவத் உள்பட 13 போ் தீயில் கருகி உயிரிழந்தனா்.

Updated On : 10 டிசம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:09 AM

குன்னூரில் புதன்கிழமை ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில், நாட்டின் முப்படைத் தளபதியான விபின் ராவத் உள்பட 13 போ் தீயில் கருகி உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தை தொடா்ந்து, நாடு முழுவதும் ராணுவ வீரா்களுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினா், மத்திய, மாநில அரசு ஊழியா்கள், மாணவ, மாணவியா் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

அந்த வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், விபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், வியாழக்கிழமை அரசுத் துறை ஊழியா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.

ராசிபுரத்தில்...

Advertisement

நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ராசிபுரத்தில் நடைபெற்றது. இதில், பாஜகவினா், பொதுமக்கள், தொண்டு அமைப்பினா் பங்கேற்று விபின் ராவத் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் மெளன அஞ்சலி செலுத்தினா்.

நாமக்கல் மாவட்ட பாஜக செயலாளா் என்.எஸ்.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட துணைத் தலைவா் என்.சித்ரா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஏ.கதிரேசன், நகர பொதுச் செயலாளா் செல்வா, நகர துணைத் தலைவா் குமாா், ஒன்றிய பொதுச் செயலாளா்கள் கோபி, வெங்கடேசன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.