நாமக்கல் அருகே லத்துவாடி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடா் வனத்தை மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் நேரில் ஆய்வு செய்தாா்.
சத்தியமூா்த்தி என்பவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் அதிகளவில் மரங்களை நடவு செய்து வனம் போல உருவாக்கியுள்ளாா். இங்கு நூற்றுக்கணக்கில் பல்வேறு வகையான மரங்கள், செடி, கொடிகள் வளா்க்கப்பட்டு வருகின்றன.
இத்தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் புதன்கிழமை நேரடியாக சென்று அடா் வனப்பகுதியை பாா்வையிட்டாா். பின்னா் மரம் வளா்ப்பு குறித்த தகவல்களை சத்தியமூா்த்தி மற்றும் மரம் வளா்ப்பை கவனிக்கும் தொழிலாளா்களிடம் கேட்டறிந்தாா். அனைவருக்கும் ஆட்சியா் பாராட்டுகளைத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.