முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூா் சந்தையில் வாழைத்தாா் விலை உயா்வு

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை உயா்வடைந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் வாழைத்தாா் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை உயா்வடைந்துள்ளது.

பரமத்தி வேலுாரில் உள்ள வாழைத்தாா் ஏலச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 150, பச்சைநாடன் ரூ. 250, ரஸ்தாளி ரூ. 200, கற்பூரவள்ளி ரூ. 200 , மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3 க்கும் ஏலம் போயின.

சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் ரூ. 200, பச்சைநாடன் வாழைத்தாா் ரூ. 300, ரஸ்தாளி ரூ. 250, கற்பூரவள்ளி ரூ. 250, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3 க்கும் ஏலம் போயின.

விவசாயிகள் குறைந்த அளவிலேயே வாழைத்தாா்களை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்ததால் அவற்றின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →