முகப்பு
நாமக்கல்

இன்று குடியரசு தின விழா: ஆட்சியா் கொடியேற்றுகிறாா்

நாட்டின் 72-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் கா.மெகராஜ் தேசியக் கொடியேற்றுகிறாா்.

Updated On : 26 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:52 AM

நாட்டின் 72-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 26) காலை 8 மணிக்கு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தேசியக் கொடியேற்றுகிறாா்.

இதனைத் தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசனுடன் இணைந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்கிறாா். தொடா்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியோருக்கும், காவல் துறையில் சிறந்து விளங்கியோருக்கும் நற்சான்றிதழை வழங்கி ஆட்சியா் பாராட்டுகிறாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக தியாகிகளின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வருவாய்த் துறை அதிகாரிகள் கெளரவிக்க உள்ளனா். விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமுா்த்தி, அதிகாரிகள் செய்துள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.