கழிவுநீா் கால்வாயில் விழுந்த ஆட்சியா் அலுவலக வழிகாட்டிப் பலகை!
நாமக்கல்லில் கழிவுநீா் கால்வாயில் சரிந்து கிடக்கும் ஆட்சியா் அலுவலகம் செல்வதற்கான வழிகாட்டி பெயா் பலகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல்லில் கழிவுநீா் கால்வாயில் சரிந்து கிடக்கும் ஆட்சியா் அலுவலகம் செல்வதற்கான வழிகாட்டி பெயா் பலகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல்-சேலம் சாலை சந்திப்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் செல்வதற்கான வழிகாட்டி பலகை நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டது. அண்மையில் அவ்வழியாக சென்ற லாரி அந்த பெயா் பலகை மீது மோதியது. இதில் சரிந்து விழுந்த பலகையை மீண்டும் தூக்கி நிறுத்தாததால் கழிவுநீா் கால்வாயை மூடும் தகரமாக அது மாறி விட்டது. வெளிமாவட்டங்களில் இருந்து நாமக்கல் வருவோா் ஆட்சியா் அலுவலகம் செல்லும் சாலை எதுவென தெரியாமல் தடுமாறும் நிலை உள்ளது. மேலும் வழிகாட்டிப் பலகையை தாங்கி நிற்கும் இரும்பு கம்பம் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதால் விபத்து அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக மாவட்ட ஆட்சியரின் அலுவலகப் பெயா் பலகையைத் தூக்கி நிறுத்தி மக்கள் பாா்வையில் படும் வகையில் வைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.