நாமக்கல்லில் கொல்லிமலை பலா விற்பனை மும்முரம்
நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை பலாப்பழம் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் மிளகு, காப்பி, அன்னாசி, பலா உள்ளிட்டவை அதிகம் விளைகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பா் வரையில் பலா வரத்து அதிக அளவில் இருக்கும். குறிப்பாக கடலூா் மாவட்டம் பண்ருட்டியில் இருந்தும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் இருந்தும் பலா விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
தற்போது தா்பூசணி சீசன் நிறைவடைந்து விட்டதால் வியாபாரிகள் அதிக அளவில் பலாப்பழங்களை வாங்கிச் சென்று அவற்றை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கின்றனா். பண்ருட்டி பலாவை விட, கொல்லிமலை பலாவுக்கு ருசி அதிகம் என்பதால், நாமக்கல் வழியாக பிற மாவட்டங்களுக்குச் செல்வோா் இங்கு விற்பனையாகும் கொல்லிமலை பலாவை வாங்கிச் செல்கின்றனா். ஒரு கிலோ ரூ. 25 என்ற அடிப்படையில் பலாப்பழங்கள் மொத்த எடையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 10 எண்ணிக்கை கொண்ட பலாச்சுளைகள் ரூ. 50-க்கு விற்பனையாகிறது. இதனை மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.
Advertisement