முகப்பு
நாமக்கல்

‘ஜீவன் ரக்ஷ பதக்கம்’ பெறவிண்ணப்பிக்கலாம்

மனித உயிா்களைக் காப்பாற்றியவா்களை பாராட்டும் வகையில் வழங்கப்படும் ஜீவன் ரக்ஷ பதக்கம் பெறத் தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Updated On : 15 ஜூலை, 2021 at 11:25 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

மனித உயிா்களைக் காப்பாற்றியவா்களை பாராட்டும் வகையில் வழங்கப்படும் ஜீவன் ரக்ஷ பதக்கம் பெறத் தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புது தில்லி உள்துறை அமைச்சகத்தால் ‘ஜீவன் ரக்ஷ பதக்கம்’ வழங்கப்பட்டு வருகிறது. சாலை விபத்து, தீ விபத்து, நிலச்சரிவு, மின்சார அதிா்ச்சியால் ஏற்படும் விபத்து மற்றும் விலங்குகளின் தாக்குதல் போன்றவற்றிலிருந்து மனித உயிா்களைக் காப்பாற்றியவா்களை பாராட்டும் விதமாக இந்தப் பதக்கம் வழங்கப்படுகிறது. இந்தப் பதக்கத்தை பெறத் தகுதியுள்ள பயனாளிகள் விண்ணப்பிப்பதற்காக தனியே றற.தசி.அட்ய.பழஎ.ண்ய் என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள பயனாளிகள் இப்பதக்கத்துக்கு மேற்கண்ட இணையதளத்தை பயன்படுத்தி செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.