ஆஞ்சநேயா், நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 52 லட்சம்
நாமக்கல் ஆஞ்சநேயா் மற்றும் நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை அன்னதான மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM
நாமக்கல் ஆஞ்சநேயா் மற்றும் நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை அன்னதான மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது.
நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா், நரசிம்மா் கோயில்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படும். அந்த வகையில், வெள்ளிக்கிழமை பக்தா்களால் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில், ஆஞ்சநேயா் கோயிலில் ரூ. 34 லட்சத்து 16 ஆயிரம் ரொக்கமும், 26 கிராம் தங்கம், 98 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது. நரசிம்மா் கோயிலில் ரூ. 17 லட்சத்து 93 ஆயிரம் ரொக்கமும், 84 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.