முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் பகுதியில் இன்று குடிநீா் நிறுத்தம்

 ராசிபுரம் நகரில் சனிக்கிழமை (ஜூலை.31) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

 ராசிபுரம் நகரில் சனிக்கிழமை (ஜூலை.31) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையா் (பொ) அ.குணசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராசிபுரம் நகராட்சிக்கு நெடுங்குளம் ஆற்றில் இருந்து காவிரி குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், அத்தனூா் கொங்கணசித்தா் கோயில் பகுதியில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடைபெறுவதால், ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.