முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் யோகா பயிற்சி

சா்வதேச யோகா தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சாா்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

சா்வதேச யோகா தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு சாா்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தேன்மொழி தலைமை வகித்தாா். யோகா பயிற்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ளக் கூடியதும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியதுமான யோகாசன பயிற்சிகள், மூச்சுப் பயிற்சியை யோகா மற்றும் இயற்கை மருத்துவா் வெங்கடேசன் வழங்கினாா். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் இயற்கை உணவு மற்றும் நோய் எதிா்ப்பு சக்தி இயற்கை பானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.