ஆட்சியா் அலுவலகத்தில் ஊடக மையம் திறப்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஊடக மையத்தை ஆட்சியா் கா.மெகராஜ் திறந்து வைத்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஊடக மையத்தை ஆட்சியா் கா.மெகராஜ் திறந்து வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களில் ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தை நடத்தி அதில் இது தொடா்பான விவரம் தெரிவிக்கப்படும் என்றாா்.
Advertisement
-