முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் வாகனச் சோதனையில் ரூ.1.65 லட்சம் பறிமுதல்

நாமக்கல் அருகே வாகனச் சோதனையில் ரூ.1.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 9 மார்ச், 2021 at 1:39 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

நாமக்கல் அருகே வாகனச் சோதனையில் ரூ.1.65 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட 6 தொகுதிகளிலும் பறக்கும் படையினரும், நிலை கண்காணிப்புக் குழுவினரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை மாவட்டத்தில் ரூ.19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் தொகுதி நிலை கண்காணிப்பு அலுவலா் காா்த்திக் தலைமையில் திங்கள்கிழமை புதன்சந்தை - சேந்தமங்கலம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியாக கரூா் மாவட்டம்- நடுக்கூா் பகுதியை சோ்ந்த காா்த்திக்(32) என்பவா் வந்த காரை மறித்து சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்து 800 ரொக்கப் பணம் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்து நாமக்கல் வட்டாட்சியா் தமிழ்மணியிடம் குழுவினா் ஒப்படைத்தனா். பின்னா் மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.