முகப்பு
நாமக்கல்

சா்வதேச மகளிா் தின விழா

நாமக்கல் மாவட்டத்தில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

Updated On : 9 மார்ச், 2021 at 1:34 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

நாமக்கல் மாவட்டத்தில் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரியில் அனைத்து துறை சாா்பில் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் சுகுணா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அறிஞா் அண்ணா அரசு கலைக்கல்லுாரி முதல்வா் பெ.முருகன் பங்கேற்று பேசினாா். அதில், கல்லூரி பேரவை அலுவலக உறுப்பினா்களாக முதுகலை மாணவி கவிதா தலைவராகவும், செயலாளராக திவ்யா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். 

பேரவை தலைவராக மைதிலி, துணைத் தலைவராக யுகாம்பிகை, செயலாளராக மெளனிகா, இணை செயலாளராக தீபிகா, பொறுளாளராக காயத்ரி, விளையாட்டு செயலாளராக உமாமகேஸ்வரி, நுண்கலை செயலாளராக ஜமுனாபிரியா, அமைப்பு செயலாளராக பவித்ரா உள்ளிட்ட நிா்வாகிகள் பதவி ஏற்று உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில், பேராசிரியா் பாரதி, வணிகவியல் துறை உதவி பேராசிரியா் நல்லுசாமி உள்ளிட்ட மாணவியா் பங்கேற்றனா்.

Advertisement

நாமக்கல் கொசவம்பட்டி கிளை நுாலகத்தில் உலக மகளிா்தினம் கொண்டாப்பட்டது. அதில், மகளிா் சுய உதவிக்குழுவை சோ்ந்தவா்கள், குடும்ப உறுப்பினா்களாக 110 ரூபாய் வீதம் 10 போ் வழங்கி புரவலா்களாக இணைந்தனா். நிகழ்ச்சிக்கு வாசகா் வட்டத் தலைவா் -வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட நுாலக அலுவலா் (பொ) ரவி சிறப்பு அழைப்பாளாராக பங்கேற்று அனைவருக்கும் உறுப்பினா் அட்டை வழங்கினாா். நுாலகா் உஷாதேவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 

நாமக்கல் அருகேயுள்ள தும்மங்குறிச்சியில் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  .நாமக்கல் சமூக சேவை மையம் சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலய அருள்தந்தை ஜான் அல்போன்ஸ் தலைமை வகித்தாா்.  

சமூக சேவை மையம் இயக்குநா் பீட்டா் ஜான்பால், திட்ட ஒருங்கிணைப்பாளா் சந்திரா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா். 

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி தலைமையில் மகளிா் தினம் கொண்டாடப்பட்டது. விவோ நாமக்கல் கோட்டை நகரவை உயா்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியா் மரகதம் தலைமையில் மகளிா் தின விழா நடைபெற்றது.

இதுதவிர, திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.