முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு தொகுதி அதிமுக, கொமதேக வேட்பாளா்கள் மனு தாக்கல்

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, கொமதேக, அமமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

திருச்செங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, கொமதேக, அமமுக வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

அதிமுக வேட்பாளா் பொன். சரஸ்வதி, திமுக கூட்டணி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளா் ஆா். ஈஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஹேமலதா ஆகியோா் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் பெ. மணிராஜுவிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா்.

வேட்பாளா்கள் அனைவரும் தனித் தனியாக ஊா்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்பாளருடன் இருவா் மட்டுமே அனுமதிக்கப் பட்டனா். திங்கள்கிழமை மொத்தம் 6 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.