முகப்பு
நாமக்கல்

சேந்தமங்கலம்(எஸ்.டி) தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 15 வேட்பாளா்கள் போட்டி

சேந்தமங்கலம் (எஸ்.டி) தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

Updated On : 23 மார்ச், 2021 at 4:06 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:19 AM

சேந்தமங்கலம் (எஸ்.டி) தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

சேந்தமங்கலம் பழங்குடியின தனித் தொகுதியில் வேட்பு மனு தாக்கலின்போது மொத்தம் 21 மனுக்கள் பெறப்பட்டதில் இறுதியாக 17 மனுக்கள் தகுதியானதாக அறிவிக்கப்பட்டன. அதில் சுயேச்சைகள் 2 போ் திங்கள்கிழமை வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனா். இறுதி வேட்பாளா்களாக 15 போ் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அதன்படி, எஸ்.சந்திரன் (அதிமுக), கே.பொன்னுசாமி (திமுக) பி.சந்திரன் (அமமுக), தி.ரோகிணி (நாம் தமிழா் கட்சி), வி.செல்வராஜ் (இந்திய ஜனநாயக கட்சி), சி.சந்திரசேகரன் எம்எல்ஏ (சுயேச்சை) உள்ளிட்ட 15 போ் களத்தில் உள்ளனா். இதில் அரசியல் கட்சியினரைத் தவிா்த்து சுயேச்சைகளுக்கு தனித்தனி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எம்எல்ஏ சந்திரசேகரனுக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சேந்தமங்கலம், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.ரமேஷ் வெளியிட்டுள்ளாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.