முகப்பு
நாமக்கல்

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 8 மே, 2021 at 12:10 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:41 AM

நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த சில தினங்களுக்கு முன் பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 98.6 மற்றும் 77.9 டிகிரியாக நிலவியது. கடந்த மூன்று நாள்களில் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த வரும் நான்கு நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டு, மாவட்டத்தின் பல இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 102.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தெற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 5 கி.மீ. என்றளவிலும் இருக்கும்.

Advertisement

சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சியினால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது.

கோழிப் பண்ணையாளா்கள் அதற்க்கேற்றவாறு கோடைக் கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும், பகல் நேரங்ளில் வெப்ப நிலை அதிகரித்து கோழிகளில் வெப்ப அயற்சி ஏற்படுவதால், நீா் தெளிப்பான் உபயோகிக்கவும், வெப்ப அயற்சி மற்றும் நோய் தாக்கத்தைக் குறைக்க தீவனத்தில் சமையல் சோடா, வைட்டமின் சி மற்றும் தாது உப்புக்கலவை உபயோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.