முகப்பு
நாமக்கல்

முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா மீது ரூ.76 லட்சம் மோசடி புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா மீது அவரது குடும்ப நண்பர் ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட குற்ற புலனாய்வு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Updated On : 27 அக்டோபர், 2021 at 9:47 PM
முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா மீது ரூ.76 லட்சம் மோசடி புகார்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:57 AM

அதிமுக முன்னாள் அமைச்சர் வெ.சரோஜா மீது அவரது குடும்ப நண்பர் ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட குற்ற புலனாய்வு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசீலன் (65). இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் உதவியாளராகவும், குடும்ப நண்பராகவும் விளங்கினார். சத்துணவு, அங்கன்வாடி மற்றும் பிற அரசு துறை சார்ந்த பணிகளில் ஆட்களை நியமிப்பதற்காக ரூ.3 முதல் 5 லட்சம் வரையில் பணம் வாங்கி அமைச்சரிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

மொத்தம் 15 பேரிடம் ரூ.76 லட்சம் வரை அரசு பணி வழங்க கோரி கொடுத்த நிலையில் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. இந்த நிலையில் பணம் கொடுத்தவர்கள் குணசீலனை நெருக்கடிக்கு ஆளாக்கினர். இதனால் அவர் கடந்த  ஆகஸ்ட் 28-ஆம் தேதி ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட குற்றப்புலனாய்வு அலுவலகத்தில் அந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட குற்றப்புலனாய்வு ஆய்வாளர் அம்பிகா கூறியதாவது: ராசிபுரத்தில் சேர்ந்த குணசீலன் என்பவர் ரூ.76 லட்சம் மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவலை தற்போது தெரிவிக்க முடியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.