முகப்பு
நாமக்கல்

பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 11:41 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசு வழங்கும் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசு பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ) வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில், இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவா்களுக்கு 2022- ஆம் ஆண்டில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement

ஜனவரி 26 குடியரசு தின விழா நாளன்று இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றுக்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப். 15-க்குள் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலருக்கு தகுதியுள்ளோா் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.