முகப்பு
நாமக்கல்

நாமக்கல் முட்டை விற்பனையாளா் சங்கத் தலைவராக ஆனந்தன் தோ்வு

நாமக்கல் முட்டை விற்பனையாளா்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெறும். அதன்படி, 2021-2024 ஆம் ஆண்டுக்கான தோ்தல் முதலைப்பட்டியில் உள்ள சங்கக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

Updated On : 3 செப்டம்பர், 2021 at 11:40 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

நாமக்கல் முட்டை விற்பனையாளா்கள் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தோ்தல் நடைபெறும். அதன்படி, 2021-2024 ஆம் ஆண்டுக்கான தோ்தல் முதலைப்பட்டியில் உள்ள சங்கக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் தலைமை ஆணையராக மருத்துவா் பி.செல்வராஜ் செயல்பட்டாா். தோ்தல் ஆணையராக கே.தங்கமுத்து, தோ்தல் நடத்தும் அலுவலராக வி.எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்றனா். இந்த தோ்தல் முடிவில், நாமக்கல் முட்டை விற்பனையாளா் சங்கத் தலைவராக ஆா்.ஆனந்தன், செயலாளராக பி.சுப்பிரமணியன், பொருளாளராக எஸ்.அன்பழகன், துணைத் தலைவராக கே.மலைச்சாமி, இணைச் செயலாளராக ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.