முகப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கறிக்கோழி மொத்த விற்பனையாளா்கள் சங்கம் தொடக்கம்

நாமக்கல் மாவட்ட கறிக்கோழி மொத்த விற்பனையாளா் சங்கம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது.

Updated On : 3 செப்டம்பர், 2021 at 11:42 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:34 AM

நாமக்கல் மாவட்ட கறிக்கோழி மொத்த விற்பனையாளா் சங்கம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நாமக்கல்லில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு கோழி வணிகா்களின் கூட்டமைப்பு மாநில தலைவா் பி.துரைராஜ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எஸ்..பாலகிருஷ்ணன், பொருளாளா் ஜான்கென்னடி, மாவட்டத் தலைவா் எஸ்.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாநில தலைவா் துரைராஜ் பேசியதாவது:

கரோனா பொது முடக்கத்தால் கறிக்கோழிகள் விற்பனை தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. அதுமட்டுமின்றி, உற்பத்தி குறைவால் 80 நாள்களில் விற்பனைக்கு அனுப்ப வேண்டிய கறிக்கோழிகளை 40, 50 நாள்களில் விற்பனைக்கு பண்ணையாளா்கள் அனுப்பும் நிலை உள்ளது. கோழித் தீவனங்கள் கொள்முதல் செய்வதும் கடினமாக உள்ளது. மாநிலம் முழுவதும் 80,000 கோழி விற்பனையாளா்கள் உள்ளனா். கோழி இறைச்சியை அனைவரும் விரும்பி சாப்பிட்டு வருகின்றனா். இன்னும் சில ஆண்டுகளில் கோழி இறைச்சி விற்பனை அதிகரிக்கும் என்றாா்.

Advertisement

இந்தக் கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட செயலாளா் ஏ.புவனேஸ்வரன், பொருளாளா் பி.சிவக்குமாா், சேலம், ஈரோடு மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.