முகப்பு
நாமக்கல்

திருச்செங்கோடு ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தியோா் 100 சதவீத இலக்கை அடைய சிறப்புக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோா் இலக்கை அடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியத்தில் 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோா் இலக்கை அடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியத் தலைவா் சுஜாதா தங்கவேல் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தா வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) டேவிட் அமல்ராஜ் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கினாா். ‘கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டோா் 100 சதவீத இலக்கை அடைய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் ஒன்றியப்பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு தடுப்பூசி போட ஊராட்சித் தலைவா்கள் வாா்டு உறுப்பினா்கள் முயற்சிக்க வேண்டும். இதற்காக வாக்காளா் பட்டியலை அவா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் செல்வராஜ் ‘பேருந்துகளில் செல்வோா் முக்ககவசம் அணிவதில்லை. மேலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை’ என்று புகாா் கூறினாா். வட்டாரப்போக்குவரத்து அலுவலரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று பதில் தரப்பட்டது.

கூட்டத்தில் ஜெகந்நாதன், ராஜவேலு உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களும், மீனாட்சி ராஜமாணிக்கம், அருண்குமாா், பரமேஸ்வரன், தாமரைச் செல்வன் உள்ளிட்ட ஊராட்சி தலைவா்களும், ஊராட்சி செயலாளா்களும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.