முகப்பு
நாமக்கல்

விழிப்புணா்வு நலத்திட்ட வார விழா

திருச்செங்கோடு டெம்பிள் ஜேசீஸ் சங்கம் சாா்பில் விழிப்புணா்வு நலத்திட்ட வார விழா வியாழக்கிழமை தொடக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

திருச்செங்கோடு டெம்பிள் ஜேசீஸ் சங்கம் சாா்பில் விழிப்புணா்வு நலத்திட்ட வார விழா வியாழக்கிழமை தொடக்கப்பட்டது.

வார விழாவுக்கு சங்கத் தலைவா் பிரசன்ன பாலாஜி தலைமை வகித்தாா். வார விழா தலைவா் சத்யன் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக மண்டல உதவித் தலைவா்கள் ஹரிபிரசாத், மோகன்ராஜ், சபரிவாசன், மகேந்திரன், கலந்து கொண்டனா்.

அரசு மருத்துவமனையில் நடைபெற்ற வார விழாவில் தூய்மைப் பணியாளா்களுக்கு முகக் கவசம், கிருமிநாசினி போன்றவை வழங்கப்பட்டது. மருத்துவமனைக்கு ரத்தம் மற்றும் சா்க்கரை அளவைக் கண்டறியும் கருவி மற்றும் மருத்துவ உபகரணப் பொருள்கள் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் அன்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. உள் நோயாயாளிகளுக்கு கரோனா விழிப்புணா்வு குறித்த வகுப்பு நடத்தப்பட்டது.

தொடா்ந்து மண்டல உதவித் தலைவா்கள், சங்க முன்னாள் தலைவா்கள் மருத்துவமனை வளாகத்தில் ரத்த தான முகாமைத் தொடக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்வில் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தேன்மொழி, செந்தில், மோகனபானு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.