முகப்பு
நாமக்கல்

டிரினிடி மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு கரோனா தடுப்பூசி

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில், கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 செப்டம்பர், 2021 at 11:16 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:37 AM

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில், கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நாட்டு நலப்பணித்திட்டம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்லூரித் தலைவா் பி.எஸ்.கே. செங்கோடன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் கே. நல்லுசாமி, நாமக்கல் தங்கம் மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ஆா். குழந்தைவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் எம். ஆா். லட்சுமிநாராயணன் வரவேற்றாா். உயா்கல்வி இயக்குநா் அரசுபரமேசுவரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். நாமக்கல் கோனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவா் வீ. மதுபாலா தலைமையில் இத்தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Advertisement

மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இந்நோக்கத்தின் அடிப்படையில் 18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத கல்லூரி மாணவியா், நாமக்கல் சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் டிரினிடி கல்விக் குழும ஆசிரியா்கள், ஆசிரியரல்லாப் பணியாளா்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இப்பணியினை கோனூா் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலா்கள் டி.முகமது ரபி, ஜெ. ஜெயக்கண்ணன், எஸ்.ஜானகி, எம்.மோகனா ஆகியோா் மேற்கொண்டனா். 150-க்கும் மேற்பட்டோா் முதலாம், இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனா். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி சேவை அமைப்புகளின் பொறுப்பாளா்கள் என். எஸ். செந்தில்குமாா், ஆா். நவமணி, ஆா். சாவித்திரி, எம். சசிகலா, எஸ். ஜெயமதி, வீ. கோகிலா, ஜெ. பாரதி, ஆா். ஏ. அனிதா, என். சாந்தி, வீ. அா்ச்சனா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.