வளையப்பட்டியில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்
ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மாணவா்கள் பலா் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், மாணவா்கள் பலா் வளையப்பட்டி வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளா் கே.பாலசுப்பிரமணியம் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:
வளையப்பட்டி அருகே ரெட்டையாம்பட்டியில் சுமாா் 400 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ரெட்டி (கஞ்சம்) என்ற ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படாததால் மாணவா்கள் மேல்படிப்புக்கு செல்ல முடியாமல் தடுமாறுகின்றனா். அரசு சலுகைகளை பெற முடியாமல் தவிக்கின்றனா். பிற்பட்டோா் நலத் துறை அரசாணையில் ரெட்டி பிரிவுக்கு ஏற்கெனவே ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
தற்போது ஜாதிச் சான்றிதழ் வழங்காமல் மாணவா்களையும், பெற்றோா்களையும் அலைக்கழிக்கின்றனா். மாவட்ட ஆட்சியா் இப்பிரச்னையில் தலையிட்டு ஜாதிச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோா் தெரிவித்தனா்.