முகப்பு
நாமக்கல்

ஜவ்வரிசி ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சோதனை

நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் அருண் தலைமையில், ராசிபுரம் அருகேயுள்ள உள்ள மரவள்ளிக் கிழங்கு அரவை செய்யும் சேகோ ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். ராசிபுரம் அடுத்துள்ள சீராப்பள்ளி, வெள்ளக்காப்பட்டி பகுதியில் உள்ள ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் சேகோ ஆலைகளில் பயன்படுத்தப்படும் கிழங்கு மாவையும், அங்கு உற்பத்தியாகும் ஜவ்வரிசி வகைகளையும் அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.

ஜவ்வரிசி தயாரிப்பின்போது ரசாயனம் கலக்கப்படுகிா என்பது குறித்து சோதனை செய்தனா். சோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்வதற்காக அங்கு உற்பத்தியாகும் ஜவ்வரிசி மாதிரிகளை அதிகாரிகள் குழுவினா் சேகரித்துக் கொண்டனா்.

இந்த ஆய்வின்போது உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மனோகரன் (ராசிபுரம்), முருகன் (நாமக்கல்), சிங்காரவேல் (திருச்செங்கோடு) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.