நாமக்கல்லில் அக். 4 முதல் காளான் வளா்ப்பு பயிற்சி
நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண், பெண் இருபாலருக்கான காளான் வளா்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
நாமக்கல் இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஆண், பெண் இருபாலருக்கான காளான் வளா்ப்பு குறித்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பயிற்சி அக். 5இல் தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோா் மற்றும் முதலில் வரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிக்கு 35 நபா்கள் தோ்ந்தெடுக்கப்பட இருப்பதால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தங்களுடைய விண்ணப்பங்களை நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன முகவரியில் அக். 4-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.
Advertisement
விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவு, இதர உணவு செலவினங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04286-221004 என்ற எண்ணிலும், 96989 96424, 8825908170 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என பயிற்சி நிறுவன இயக்குநா் பிருந்தா தெரிவித்துள்ளாா்.