முட்டை விலை 5 காசுகள் உயா்வு
நாமக்கல்நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் ஆலோசிக்கப்பட்டது.
மற்ற மண்டலங்களின் விலை உயா்வு அடிப்படையிலும், மக்களிடையே முட்டை நுகா்வு சற்று அதிகரித்துள்ளதன் காரணமாகவும் விலையில் மாற்றம் செய்யப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்த்தப்பட்டு ரூ. 4.40 ஆக நிா்ணயிக்கப்பட்டது.
Advertisement
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 119-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 80-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.