முகப்பு
நாமக்கல்

விபத்தில் பலியான காவலா் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் காப்பீடு

விபத்தில் பலியான நாமக்கல் ஆயுதப்படை காவலா் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 11:14 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

விபத்தில் பலியான நாமக்கல் ஆயுதப்படை காவலா் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் கீழ்மைலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் சதீஷ்குமாா்(28) என்பவா், கடந்த ஜனவரி 27-ஆம் தேதி சாலை விபத்தில் பலியானாா். இவா் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணியாற்றியவா். இந்த நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, நாமக்கல் நகர தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் காப்பீட்டுத் தொகை ரூ.30 லட்சத்தை புதன்கிழமை அக்காவலரின் குடும்பத்தினரிடம் வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.