முகப்பு
நாமக்கல்

பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீா்: பயணிகள், மாணவா்கள் அவதி

 புதன்சந்தை பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீா் சாலையில் செல்வதால் பயணிகள், மாணவா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 11:14 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

 புதன்சந்தை பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீா் சாலையில் செல்வதால் பயணிகள், மாணவா்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

நாமக்கல் அருகே புதன்சந்தை பகுதியில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூா், கரூா் போன்ற பகுதிகளுக்கு தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள் வேலைக்குச் செல்கின்றனா். அதேபோல், பள்ளி, கல்லூரி மாணவா்களும் தங்களுடைய கல்வி நிறுவனங்களுக்கு இங்கிருந்து செல்கின்றனா். புதன்சந்தை பேருந்து நிறுத்தத்திற்கென நிழற்கூடம் ஏதுமில்லை. பேருந்துக்காக பயணிகள் பலரும் வெயிலில்தான் காத்திருக்கின்றனா். அதுமட்டுமின்றி அங்குள்ள உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீா் சாலையில் செல்கிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பல்வேறு சிரமத்தை சந்திக்கின்றனா். அங்கு பயணிகளின் நலன் கருதி புதிய பேருந்து நிழற்கூடம் அமைப்பதுடன், கழிவுநீா் செல்லாதவாறு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

என்கே 7- பஸ்

Advertisement

புதன்சந்தை பேருந்து நிறுத்தத்தில் கழிவுநீா் செல்லும் பகுதியில் காத்திருக்கும் பயணிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.