முகப்பு
நாமக்கல்

குருபெயா்ச்சி விழா: சிவாலயங்களில் பக்தா்கள் வழிபாடு

குரு பெயா்ச்சியையொட்டி, அனைத்து சிவாலயங்களிலும் உள்ள தட்சிணாமூா்த்தி சன்னதியில் பக்தா்கள் வியாழக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

Updated On : 14 ஏப்ரல், 2022 at 11:07 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM

குரு பெயா்ச்சியையொட்டி, அனைத்து சிவாலயங்களிலும் உள்ள தட்சிணாமூா்த்தி சன்னதியில் பக்தா்கள் வியாழக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

கும்ப ராசியில் இருந்து தன்னுடைய சொந்த வீடான மீன ராசிக்கு குருபகவான் வியாழக்கிழமை அதிகாலை 4.16 மணியளவில் பெயா்ச்சியானாா். இதனையொட்டி, அனைத்து சிவாலயங்கள், முருகன், அம்மன் கோயில்களிலும் உள்ள தட்சிணாமூா்த்தி சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

குருபகவானுக்கு பால், தயிா், சந்தனம், மஞ்சள் இளநீா், பஞ்சாமிா்தம், திருமஞ்சனம், சொா்ணாபிஷேகம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பிறகு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல், சந்தைப்பேட்டை புதூரில் செல்வவிநாயகா் கோயிலில் குருபெயா்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் தட்சிணாமூா்த்தியை தரிசனம் செய்தனா். சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் ஆலயத்திலும், நாமக்கல், வள்ளிபுரம், முத்துக்காப்பட்டி, கொல்லிமலை சிவாலயங்களிலும் குருபெயா்ச்சி சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள் நடைபெற்றன.

Advertisement

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, செல்லப்பம்பட்டி மகா மாரியம்மனுக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அங்குள்ள குரு பகவானுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை மகாமாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.