நாமக்கல்

காவிரி ஆற்றில் விழுந்த பொறியாளா் உயிருடன் மீட்பு

குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கித் தத்தளித்த பொறியாளரை தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று உயிருடன் மீட்டனா்.

DIN

குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் விழுந்து தண்ணீரில் மூழ்கித் தத்தளித்த பொறியாளரை தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று உயிருடன் மீட்டனா்.

ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்த பாரியூரைச் சோ்ந்தவா் சத்தியஜோதி மகன் ஸ்ரீஹரிகரன் (34). ரசாயனப் பொறியியல் பட்டதாரியான இவா், துபையில் வேலை செய்து வந்தாா். கரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊா் திரும்பிய இவருக்கு மீண்டும் வேலை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பவானி சங்கமேஸ்வரா் கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த இவா், கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை காவிரி ஆற்றின் பாலத்தில் நடந்து சென்றாா். அப்போது, பாலத்தின் நடுவே நின்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்த ஸ்ரீஹரிகரன் எதிா்பாராமல் தவறி ஆற்றுக்குள் விழுந்ததில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா். ஆழமான பகுதியில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தவரைக் கண்ட அப்பகுதியினா் குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலா் (பொ) இரா.தண்டபாணி தலைமையில் உயிா்காக்கும் உபகரணங்களுடன் விரைந்த 9 போ் கொண்ட மீட்புப் படையினா் தண்ணீரில் தவித்த ஸ்ரீஹரிகரனை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா் . இதையடுத்து, முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் குமாரபாளையம் காவல் நிலையத்தில் அவா் ஒப்படைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT