நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் அமைச்சா் க.அன்பழகன் நூற்றாண்டு நினைவு உருவப் படம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வனத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் , மாநிலங்களவை உறுப்பினா்கள் திருச்சி என்.சிவா, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் ஆகியோா் பங்கேற்று படத்தினை திறந்துவைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சிக்கு ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். வரலாற்றுத் துறைத் தலைவா் சி.நாகூா் செல்வம் வரவேற்றாா். முன்னதாக திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கல்லூரி ஆங்கில துறைத் தலைவா் பெ.மைதிலி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.