முட்டை விலை 10 காசுகள் உயா்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 4.70-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 4.70-ஆக வியாழக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. பள்ளிகள் திறப்பு, ஊரடங்கு தளா்வு, மக்களிடையே நுகா்வு அதிகரிப்பு, பிற மண்டலங்களில் விலை உயா்வு போன்றவற்றால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமின்றி விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் விலையில் மாற்றம் செய்யலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 10 காசுகள் உயா்வுடன் ரூ.4.70-ஆக நிா்ணயிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.96-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.67-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.
Advertisement