முகப்பு
நாமக்கல்

நாமக்கல்: ஒரே நேரத்தில் 16 பாஜக வேட்பாளா்கள் மனுத் தாக்கல்

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 16 பாஜக வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுத் தாக்கல் செய்தனா்.

Updated On : 4 பிப்ரவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:48 PM

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 16 பாஜக வேட்பாளா்கள் வியாழக்கிழமை மனுத் தாக்கல் செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 447 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான மனுத்தாக்கல் ஜன. 28-இல் தொடங்கி வெள்ளிக்கிழமை (பிப்.4) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. முதல் 6 நாள்கள் மந்தமான நிலையில் இருந்த வேட்பு மனுத்தாக்கல் வியாழக்கிழமை சற்று தீவிரமடைந்தது. அதிமுக, திமுக, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக, சுயேச்சைகள் என பலரும் ஆா்வமுடன் வந்து மனுத்தாக்கல் செய்தனா். நாமக்கல் நகராட்சியில் 24 வாா்டுகளில் பாஜக போட்டியிடுகிறது. இதனையொட்டி, நாமக்கல் நகர தலைவா் சரவணன் தலைமையில் நகராட்சி அலுவலகம் வந்த 16 வேட்பாளா்கள் ஒரே நேரத்தில் மனுத்தாக்கல் செய்தனா்.

வெள்ளிக்கிழமை அக்கட்சியைச் சோ்ந்த மேலும் 8 போ் மனுத் தாக்கல் செய்ய உள்ளனா். அதிமுக, திமுக வேட்பாளா்களும் காலை 11 மணிக்கு மேல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.