சட்டையம்புதூா் அங்காளம்மன் கோயிலில் யாக கலச வேல் பூஜை விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டையம்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் வேல் மற்றும் வேல் பூஜை யாக பூஜை கலச பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டையம்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் வேல் மற்றும் வேல் பூஜை யாக பூஜை கலச பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சட்டையம்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காளம்மன் கோயிலில் மாலை யாகம் யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து கலச பூஜைகள் நடத்தப்பட்டு வேல் பூஜை செய்யப்பட்டு புதிய வேல் அம்மனுக்கு சாட்டப்பட்டது. மேலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் அன்னதானம் செய்யப்பட்டது.