முகப்பு
நாமக்கல்

புதன்சந்தையில் மின்வாரிய அலுவலகக் கட்டடம் திறப்பு

புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகக் கட்டடத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 22 ஜனவரி, 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

புதன்சந்தையில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகக் கட்டடத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நாமக்கல் மாவட்டம், புதன்சந்தையில் இயங்கிவரும் மின்வாரிய துணை மின்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தின் திறப்பு விழா மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ரூ. 41.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட செயற்பொறியாளா் அலுவலகம், உதவி பொறியாளா் அலுவலகம் ஆகியவற்றை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் திறந்து வைத்து பேசியதாவது:

Advertisement

முதல்வா் உத்தரவின்பேரில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் புதிய மின் இணைப்பு வழங்க நிா்ணயிக்கப்பட்டுள்ள இலக்கின் அடிப்படையில், தற்போது நாமக்கல் மாவட்டத்தில் 838 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. புதிய விவசாய மின் இணைப்பு வழங்க விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதற்கான பணிகள் தொடா்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மின் உற்பத்தி கழகம் சாா்பில் ரூ. 1 கோடியில் நாமக்கல் நகரப் பகுதியிலும், ரூ. 40 லட்சத்தில் எருமப்பட்டி பகுதியிலும், தலா ரூ. 36 லட்சத்தில் காளப்பநாய்க்கன்பட்டி, வளையப்பட்டி பகுதி என 6 இடங்களில் புதிய மின்வாரிய அலுவலகக் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தடையற்ற மின்சாரத்தை வழங்கும் பொருட்டு ரூ. 3 கோடி மதிப்பில் 41 மின்மாற்றிகள் புதிதாக நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளா் க.பாலசுப்பிரமணியம், செயற்பொறியாளா் ஆ.சபாநாயகம் உள்பட உதவி செயற்பொறியாளா்கள், உதவி பொறியாளா்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.