முகப்பு
நாமக்கல்

விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் பூங்கா சாலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 21 ஜனவரி, 2022 at 11:49 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:41 PM

நாமக்கல் பூங்கா சாலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் பழ.மணிமாறன் தலைமை வகித்தாா்.

சேலம், கருப்பூரைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி இளைஞா் பிரபாகரன், காவல் துறையினரின் விசாரணையின்போது உயிரிழந்தாா். அவருடைய மரணத்துக்கு காரணமான நாமக்கல், சேந்தமங்கலம் காவல் துறையினா் மீது அரசு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா். இதில் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.